Connect with us

வணிகம்

கார் வாங்கப் போறீங்களா? கடன் இல்லாமல் இப்படியும் வாங்கலாம்; இத மட்டும் நோட் பண்ணுங்க!

Published

on

Debt car

Loading

கார் வாங்கப் போறீங்களா? கடன் இல்லாமல் இப்படியும் வாங்கலாம்; இத மட்டும் நோட் பண்ணுங்க!

கார் வாங்குவது என்பது பலருக்கு இருக்கும் ஆசை, கனவு என்று சொல்லலாம். ஒருசிலருக்கு அது ஏக்கமாகவும், ஒருசிலருக்கு அது பெருமையாக இருக்கக்கூடிய விஷயமாகவும் தெரியும். இது நடுத்தர குடும்பத்தினருக்கு கனவாகவே உள்ளது. கடன் வாங்காமல் கார் வாங்க முடியுமா? கடன் வாங்கி கார் வாங்கியிருந்தால் தற்போது என்ன செய்வது? உங்க சம்பளத்திற்கு தகுந்த கார் எது? எப்படி திட்டமிட்டு கார் வாங்குவது? என்று பாஸ்வாலா(தமிழ்) யூடியூப் சேனலில், கூறிய தகவல்களைப் பற்றி பார்க்கலாம். உணர்ச்சிவசப்பட்டு கார் வாங்காமல், சரியான திட்டமிட்டு வாங்கினால், கடன் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறார் யுவராணி.கார் வாங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்: 1. கடன் வாங்கி கார்?/ பணம் கொடுத்து கார் வாங்கலாமா?:  கார் என்பது நமது சொத்து. நாட்கள் செல்ல செல்ல கார் தனது மதிப்பை இழந்துக் கொண்டே வரும். நீங்கள் புதிய கார் வாங்க விரும்பினால் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். பட்ஜெட், கடன் விருப்பங்கள், மாடல்கள் என நீங்கள் வாங்கத் திட்டமிடும் காரை திறம்பட சோதனை செய்து வாங்குவது முக்கியம். தனது மதிப்பை இழக்கக் கூடிய சொத்துக்கு அதிக கடன் போட்டு வாங்க போறீங்களா? உதாரணத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் 7 வருட காலத்தில் 10% வட்டிக்கு வாங்கும்போது, கடன் முடிவில் 10 லட்சத்துக்கு 4 லட்சம் வட்டியுடன் சேர்த்து 14 லட்சமாக நீங்கள் பணம் கட்டியிருப்பீர்கள். முடிந்த அளவிற்கு பணம் சேர்த்து வைத்து கார் வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்கிறார் யுவராணி. இதனால், எந்த விதமான இ.எம்.ஐ. கிடையாது, யாருக்கும் வட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை, டென்சன் போன்ற பிரச்னைகளில் இல்லை2. செகெண்ட் ஹேண்ட் கார் வாங்கலாமா?: கார் வாங்குவதுதான் ஆசை என்றால், அது புதிய காராகவோ அல்லது பழைய செகெண்ட் ஹேண்ட் காராக கூட இருக்கலாம். நீண்ட நாள் உழைப்பு, நல்ல மைலேஜ், அதிக பயன்பாடு இதற்கு செகெண்ட் ஹேண்ட் காரை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் யுவராணி. புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியேறிவிட்டால் அதன் ஒரிஜினல் மதிப்பில் இருந்து 10% குறைந்துவிடும். அடுத்த 2 ஆண்டுங்களில் அது 20% ஆக மாறிவிடும். அடுத்த 5 ஆண்டுகளில் 50% மதிப்பை கார் இழந்துவிடும். 5 வருடத்திற்கு முன்பு ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய கார், தற்போது ரூ.5 முதல் 6 லட்சத்துக்கு  நாம் வாங்கலாம். கார் கண்டிஷென் நன்றாக இருக்கும், குறைந்த அளவிலான தூரம் மட்டுமே இயக்கப்பட்டிருப்பதால், தோற்றம் நன்றாக இருந்தால் செகெண்ட் ஹேண்ட் காரைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், புதிய காராக இருந்தாலும் சரி, பழைய காராக இருந்தாலும் சரி கடன் இல்லாமல் வாங்குவது நிம்மதி என்கிறார் யுவராணி. 3. கடன் வாங்கினாலும் பாதிப்பு இல்லாமல் வாங்குவது அவசியம்: முதலில், உங்களுக்கு எந்த வகையான கார் தேவை என்பதை முடிவு செய்யுங்கள். இது உங்கள் பட்ஜெட், வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, வீட்டில் எத்தனை பேருக்கு கார் ஓட்ட தெரியும் போன்றவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். உங்களுக்கு SUV, Fortuner என பெரிய கார்கள் தொடங்கி ஸ்விப்ட், வேக்னார் என சிறிய கார்கள் வரை சாய்சில் உள்ளது.  ஒரு காரைத் தேர்ந்தெடுத்த பிறகு, எந்த ஷோரூமில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பாருங்கள். 4 ஷோரூம்களுக்கு என்று விலையை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இ.எம்.ஐ. பிரச்னையை சரிசெய்வீர்கள் என்றால், கடன் வாங்கியும் கார் வாங்கலாம். எப்படி கார் வாங்குவது என்பதை விட எப்படி லோன்/கடன் வாங்குவது என்பது முக்கியம். நீங்கள் வாங்கும் கடனில் 30% அதிகமான இ.எம்.ஐ. கார் லோனுக்கு போக கூடாது என்கிறார் யுவராணி. உதாரணத்திற்கு ரூ.60,000 சம்பளம் வாங்கும் ஒருவர், அதில் ரூ.18,000 அதாவது 30% மட்டுமே கார் லோனுக்கு இ.எம்.ஐ கட்ட வேண்டும். நன்றி: Boss Wallah (Tamil)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன