பொழுதுபோக்கு
எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்ட அடி வாங்கிட்டேன்; இப்போ உன்கிட்டயும் அடி வாங்கனுமா? பிரபல இயக்குனரை விராட்டிய நம்பியார்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்ட அடி வாங்கிட்டேன்; இப்போ உன்கிட்டயும் அடி வாங்கனுமா? பிரபல இயக்குனரை விராட்டிய நம்பியார்!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆருக்கு நகரான வில்லனாக நடித்தவர் நம்பியார். சினிமாவில் வில்லன் என்றாலும் நிஜத்தில் ஹீரோவாக இருந்த அவரை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அணுகியபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். அந்த படத்தில் ஒரு மருத்துவர் கேரக்டரிலும் நடித்திருப்பார். அதன்பிறகு, பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த அவர், சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்றுபோச்சு, பொய்சாட்சி, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி நாயகனாகவும் வெற்றி பெற்றார்.அதேபோல், தமிழ் சினமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நம்பியார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்து படங்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு இணையாக முக்கியத்தவம் பெருபவர் நம்பியார். இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர். சிவாஜி நடித்த பெரும்பாலான படஙகளில் வில்லன் நம்பியார் தான். காமெடி வில்லன் சீரியஸ் வில்லன் என வில்லன் ரோலை கூட வித்தியாசமாக செய்து பாராட்டுக்களை பெற்றவர் நம்பியார். பின்னாளில் காமெடி மற்றும் குணச்சித்தி வேடங்களில் தனது நடிப்பின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தினார்.கொடூர வில்லனாக இருந்த நம்பியாரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக மாற்றிய பெருமை, நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ்க்கு உண்டு. தமிழ் சினிமாவின், தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்த நம்பியாரை தனது தூறல் நின்னு போச்சு படத்தில் நடிக்க வைக்க, அவரை தேடி அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிம் என்ன விஷயம் என்று நம்பியார் கேட்க, என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நம்பியார், நான் எம்.ஜி.ஆர் சிவாஜி இடம் எல்லாம் அடி வாங்கியாச்சி, இப்போ உன்ன மாதிரி ஆட்கள்டயும் அடி வாங்கனுமா என்று கூறியுள்ளார்.அதன்பிறகு பாக்யராஜ் கதையை சொல்ல, அதிர்ச்சியான நம்பியார், பாசிட்டீவா அது செட்டாகாது நீ கௌம்பு என்று கூறியுள்ளார். ஆனாலும் விடாத பாக்யாராஜ் அவரை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். வில்லன் ரோலில் தனக்கென தனி முத்திரை பதித்த நம்பியார் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.