தொழில்நுட்பம்
வயர்லெஸ் சார்ஜர் முதல் துல்லியமான பிங்கர் பிரிண்ட் வரை… ‘POCO F7’ போன் வாங்கும் முன் இத நோட் பண்ணுங்க!

வயர்லெஸ் சார்ஜர் முதல் துல்லியமான பிங்கர் பிரிண்ட் வரை… ‘POCO F7’ போன் வாங்கும் முன் இத நோட் பண்ணுங்க!
போக்கோ எஃப்7 அல்ட்ரா (Poco F7 Ultra specifications): 50 எம்.பி பிரைமரி கேமரா + 32 எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50 எம்.பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் போக்கோ எஃப் 7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மேலும், 32 எம்.பி. செல்பி கேமரா இதில் உள்ளது.6.7-இன்ச் ஒ.எல்.இ.டி (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். போக்கோ எஃப்7 அல்ட்ரா கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. இது 212 கிராம் எடையுடன், கையில் பிடிப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்களும் உள்ளன. போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் அறிமுகமாகும். மேலும், இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன்) உடன் வெளிவரும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன். IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு இந்த அம்சம் போனை தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் 5,300mAh பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக, கேமிங் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை சுமார் ₹50,000 முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி: Tamil Tech – MrTT