Connect with us

உலகம்

செஸ் பிரியர்களுக்கு பேரிடி; ஆப்கானிஸ்தான் அரசு போட்ட உத்தரவால் அதிர்ச்சி!

Published

on

Loading

செஸ் பிரியர்களுக்கு பேரிடி; ஆப்கானிஸ்தான் அரசு போட்ட உத்தரவால் அதிர்ச்சி!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும், உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டிற்கு தாலிபான் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. ஷரியா சட்டத்தின் அடிப்படையில் சதுரங்க விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறை என்று கருதப்படுகிறது. அதே சமயம் மத கலாசாரத்திற்கு எதிராக செஸ் விளையாட்டு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது அதனால், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று  தாலிபான் அரசாங்கத்தின் விளையாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானில் இருக்கும் செஸ் பிரியர்களுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • திடீரென குறுக்கே வந்த நாயால் பெரும் விபத்து; 6 பேருக்கு நேர்ந்த துயரம்

  • செஸ் பிரியர்களுக்கு பேரிடி; ஆப்கானிஸ்தான் அரசு போட்ட உத்தரவால் அதிர்ச்சி!

  • பைக்கை இயக்கிய 14 வயது சிறுவன்; கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம்

  • ரூ.39 லட்சம் அபேஸ்… இளைஞருக்கு விபூதி அடித்த இளம்பெண்!

  • தணியும் போர் சூழல்-நாட்டு மக்களுடன் உரையாற்றும் மோடி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன