சினிமா
தெலுங்கில் மாஸ் காட்ட ரெடியாகும் “கூலி” பட வில்லன்..! வெளியான புதிய அப்டேட் இதோ..!

தெலுங்கில் மாஸ் காட்ட ரெடியாகும் “கூலி” பட வில்லன்..! வெளியான புதிய அப்டேட் இதோ..!
தெலுங்கு சினிமாவில் ஒரு கலகலப்பான மற்றும் எனர்ஜி ஹீரோ என்ற பெயரைப் பெற்றவர் ராம் பொத்தினேனி. இவர் அதிகளவான மாஸ் படங்களில் நடித்து, இளைய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அந்த வரிசையில் தற்போது அவரது 22வது திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்திற்கு தற்போது ‘ RAPO 22’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் கதை, காட்சிகள், கதாநாயகி மற்றும் வில்லன் என அனைத்தும் தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் உபேந்திராவின் கம்பேக், தெலுங்கு ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.‘RAPO 22’ என அழைக்கப்படும் இந்தத் திரைப்படத்தை மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குநர் மகேஷ் பாபு இயக்குவதுடன் இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இது அவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என சிலர் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.