சினிமா
அழகில் நட்சத்திரம் போல ஜொலிக்கும் லாஸ்லியா..! லேட்டஸ்ட் க்ளிக்ஸால் வைரலான இன்ஸ்டாகிராம்..!

அழகில் நட்சத்திரம் போல ஜொலிக்கும் லாஸ்லியா..! லேட்டஸ்ட் க்ளிக்ஸால் வைரலான இன்ஸ்டாகிராம்..!
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கவர்ந்து மக்கள் மனதில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் லாஸ்லியா. நிகழ்ச்சியில் அவரது பாசம் பொருந்திய நடத்தை, எளிமையான பேச்சு மற்றும் புன்னகை நிறைந்த முகபாவனை என அனைத்துமே ரசிகர்களை ஈர்த்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சினிமா மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரபரப்பாக வலம் வரும் லாஸ்லியா, தற்போது தன்னுடைய புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மிகவும் அழகாகவும், ஸ்டைலிஷ் லுக்கிலும் திகழும் லாஸ்லியாவின் புகைப்படங்கள், ரசிகர்களிடையே கமெண்ட்ஸ் மழையை உருவாக்கி உள்ளது.இந்த புகைப்படங்களில் மஞ்சள் கலர் உடையில் சிறப்பான தோற்றத்துடன் லாஸ்லியா ஜொலிக்கின்றார். இந்த போட்டோக்களுக்கு குறைந்தளவு நேரத்திலேயே அதிகளவான லைக்குகளும் கிடைத்துள்ளன. இப்போது வெளியான இந்த மஞ்சள் உடை போட்டோஷூட் மூலம் மீண்டும் நடிகையாகும் சாமர்த்தியம் உறுதி என சிலர் கருதுகின்றனர்.