Connect with us

இலங்கை

இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும்! ஜனாதிபதி வாழ்த்து

Published

on

Loading

இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும்! ஜனாதிபதி வாழ்த்து

இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும் என ஜனதிபதி அனுரகுமார திசாநாயக்க வெசாக் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.

 புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும்.

 அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. 

Advertisement

மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும்.மேலும், ஒரு ஆட்சியாளர் நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது.

 “சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

 புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு,பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

Advertisement

 புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தர்மத்தின் ஞானத்தால் அனைத்து இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும்!

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1746915357.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன