இலங்கை
நாவந்துறையில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வெட்டுவான் – யாவரும் கேளீர்!!

நாவந்துறையில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வெட்டுவான் – யாவரும் கேளீர்!!
இன்று காலை நண்பர் ஒருவர் எனது வட்ஸ்அப்க்கு தொலைபேசி உரையாடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் அவரும் மறுமுனையில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கிளிநொச்சி தமிழரசு கட்சியில் போட்டியிட்டவரும் ஆசிரியருமான ஒருவர் உரையாடியிருந்தார்.
இந்த உரையாடலில் தங்களது கட்சியை சேர்ந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயத்தை தமிழ்ச்செல்வன்தான் பெரிது படுத்தியதாக,குறிப்பிட்ட அந்த ஆசிரியர் அந்த பயிற்றுவிப்பாளரின் பெயரை சொல்லி அவர் வெளியில் வந்தவுடன்நாவந்துறையில் இருந்து ஆட்களை கொண்டு வந்து #வாளால் வெட்டுவான் பொறுத்திருந்து பாருங்கோ என்று கூறுகின்றார்.
இந்த உரையாடலை கேட்ட எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது.
அதாவது 10 தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்களை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து அது உறுதிப்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இவர் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தனது கட்சி நண்பன் செய்த தவறை இப்பொழுதும் நியாயப்படுத்துகிறார்.
இரண்டாவது, பாதிக்கப்பட்ட16 சிறுவர்கள் சார்பாக இந்த விடயத்தை வெளியில் கொண்டு வந்து நீதியை பெற்றுக்கொடுக்க ஆதாரங்களோடு உண்மையை எழுதிய என்னை ஆட்களை வைத்து வாளால் வெட்டுவான் என்று கூறியது.
மூன்றாவது தனது கட்சி நண்பன் தவறு செய்திருக்கிறான்.
அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனவே அவனின் தவறுக்கு எதிராக செயற்படாது விடினும் நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தாமல் இருந்திருக்கலாம்.
நான்காவது இதே வயதை ஒத்த மாணவர்களுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியரான அவரிடமிருந்து இந்த மாதிரியான வார்த்தை பிரயோகங்களை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.
ஐந்தாவது நாவாந்துறை பிரதேசம் சிறந்தவிளையாட்டு வீரர்களையும், நற்பண்பாளர்களையும் கொண்டது. அதுமட்டுமல்ல ஏராளமான விடுதலைப்போராளிகளையும் தந்தது.
அத்துடன் அங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் (எட்வேட்) பல மதக்குருக்கள், கன்னியாஸ்திரிகள், எழுத்தாளர்கள், சிறந்த கடற்றொழிலாளர்கள், கல்விமான்கள் என பலரை உருவாக்கிய பிரதேசமாகும். அப்படியிருக்கும் போது, அதற்கு மாறாக இந்த ஆசிரியர் நாவாந்துறையை ரவுடிகளின் கூடாராமாக நாவாந்துறையை காண்பிக்கின்றார்.
இதனை தவிர இந்த உரையாடல் பற்றி இன்று கிளிநொச்சியில் அவரை வீதியில் கண்டு வினவிய போது தான் என்னை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பொதுவாக கூறியதாகவும் தெரிவித்து சமாளித்தார்.
கிளிநொச்சியை பொறுத்தவரை 2009 பின்னரான காலத்தில் தவறுசெய்கின்றவர்களை பாதுகாப்பதும், அதனை தட்டிக் கேட்பவர்களை தண்டிப்பதும் அச்சுறுத்துவதுமே தொடர்ந்து காணப்படுகிறது. இது கிளிநொச்சியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
MORE NEWS IN LANKA4.COM
ஆதாரப் பதிவு.
பொறுப்பு துறப்பு. யாராகிலும் யாதும் ஊரே யாவரும் கேளீர்.
சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை