Connect with us

சினிமா

கட்டடத்தில வேலை செய்தவர்; இப்ப BMW காரில போறார்..சூரியைப் புகழ்ந்த முக்கிய பிரபலம்!

Published

on

Loading

கட்டடத்தில வேலை செய்தவர்; இப்ப BMW காரில போறார்..சூரியைப் புகழ்ந்த முக்கிய பிரபலம்!

திரையுலகில் தற்பொழுது உயரத்திற்குச் சென்று அனைவராலும் மதிப்பளிக்கப்பட்ட நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூரி. அத்தகைய சூரியின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்த தடைகளை யாரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டார்கள். எனினும் சமீபத்தில் நடைபெற்ற “மாமன்” திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில், பேச்சாளர் மகேஷ் சூரி பற்றிய ஒரு உணர்ச்சி மிகுந்த நிகழ்வைப் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மிகவும் எமோஷனல் அடைந்து கொண்டனர்.விழாவின் மேடையில் நின்று, நடிகர் சூரியின் வாழ்க்கைப் பயணத்தை மிக எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் விவரித்த மகேஷ், அவரிடம் இருந்த நெருங்கிய நட்பின் அடையாளமாக சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்தார். “சூரி காரில் போகும் போது, எப்போதும் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருப்பேன். ஆனா ஒரு பெரிய பில்டிங்கைப் பார்த்தால், உடனே கால்களை கீழே இறக்கி உட்காருவேன்.” என்று சூரி ஒருமுறை மகேஷிடம் கூறியுள்ளார்.அதற்கு மகேஷ், “ஏன் அண்ணா, உங்களுக்கு காலில ஏதும் பிரச்சனையா?” என்று நக்கலாக கேட்டதாகவும் கூறியிருந்தார். அதைக் கேட்ட சூரி,“தலைவரே, அந்த கட்டடம் கட்டும் போது, அதில் நான் வேலை செய்திருக்கேன். இன்று அந்தக் கட்டடத்திற்குக் கீழே நான் BMW காரில் போகிறேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த அந்த இடத்திற்கு முன்னால் கால் மேல கால் போட்டு எப்படி உட்கார முடியும்?”, என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தை பகிர்ந்த மகேஷ், “இதுதான் சூரி…! இது தான் அவருடைய மனம். அவர் இன்று எந்த உயரத்திலும் இருந்தாலும், தன்னை உருவாக்கிய அடிப்படையை மறக்காதவர்” என்று பெருமையுடன் கூறினார்.மேலும், “மாமன் திரைப்படம் மூலம் சூரி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். இந்த படம் மூலம் அவருக்குக் கிடைக்கும் விருதுகள் அனைத்தையும் வாங்கும் தகுதி அவருக்கு இருக்கு.” என்று மகேஷ் உறுதியாக தெரிவித்தார். மகேஷின் வார்த்தைகள் சூரியின் வாழ்க்கையைச் சுருக்கமாகவும், ஆழமாகவும் விவரிக்கின்றன. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சூரியின் வாழ்க்கை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன