சினிமா
மெழுகு சிலையைப் பார்த்து குழப்பத்தில் நின்ற ராம் சரணின் குட்டி பிரின்சஸ்.!வைரலாகும் வீடியோ

மெழுகு சிலையைப் பார்த்து குழப்பத்தில் நின்ற ராம் சரணின் குட்டி பிரின்சஸ்.!வைரலாகும் வீடியோ
பிரபல தெலுங்கு நடிகரும், உலகளாவிய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராம் சரண், தற்போது தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை அனுபவித்து வருகின்றார். S.S. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படத்தின் மூலமாக உலகமே பாராட்டிய ராம் சரணுக்கு தற்போது லண்டனில் மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.2022ம் ஆண்டு வெளியான RRR திரைப்படம், இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த இந்த திரைப்படம், ஹாலிவூட் ரசிகர்களிடமும், உலக திரைப்பட விழாக்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இத்திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டதோடு, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதும் வென்றது. இந்நிலையில், லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஆல்பெர்ட் ஹால் அரங்கில், RRR திரைப்படம் திரையிடப்பட்டது. இதில், இயக்குநர் ராஜமெளலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடல் முடிந்ததும் மேடையில் எழுந்து ரசிகர்களுக்கு வாழ்த்துரை வழங்கிய ராம் சரண், “இந்த அரங்கில் நம் படம் திரையிடப்படுவது ஒரு கனவாக இருக்கிறது” என உருக்கமாகக் கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கு இணையாக, லண்டனில் உள்ள உலக பிரசித்திபெற்ற மெழுகுச் சிலை அரங்கமான துசாட்ஸ் மியூசியத்தில் ராம் சரண் மற்றும் அவரது செல்ல நாய்குட்டி ஆகிய இருவரையும் பிரதிபலிக்கும் மெழுகுச் சிலை அறிமுகம் செய்யப்பட்டது.இந்த மெழுகுச் சிலை நிகழ்வு ராம் சரணின் ரசிகர்களிடையே பெரும் புயலை எழுப்பியுள்ளது. சிலையின் தோற்றம், உடை, அசைவற்ற முறை அனைத்தும் உண்மையிலேயே ராம் சரணுடன் தோற்றமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அத்துடன் அதனைப் பார்த்த அவருடைய மகள் எது நியமான தந்தை என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக அமைந்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.