சினிமா
பொள்ளாச்சியில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்ற விஜய்..! நடந்தது என்ன..?

பொள்ளாச்சியில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்ற விஜய்..! நடந்தது என்ன..?
பொள்ளாச்சியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் மனதில் கடும் பதற்றத்தையும், வலியையும் ஏற்படுத்திய ஒன்று. 2019ம் ஆண்டிலிருந்து விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில், தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பு பலராலும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய், இந்த தீர்ப்பை “சமூக நீதிக்கு ஓர் நம்பிக்கை உள்ள தீர்ப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் காணப்பட்ட நீதிக்கான வெற்றியாகவே இதைப் பார்ப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். வழக்குத் தீர்ப்பு வெளியான பிறகு, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய் கூறியதாவது, “இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ‘சாகும் வரை ஆயுள் தண்டனை’ வழங்கப்பட்டிருப்பது, சமூக நீதிக்கான ஒரு உறுதியான அடையாளம். 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்கிய வேதனைகள் அனைத்துக்கும் இது ஓரளவு ஆறுதலாக அமையும்.” என்றார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.