உலகம்
காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவின் நுசெய்ரட் அகதிமுகாமில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த கட்டிடத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
புழுதியும் இடிபாடுகளும் நிறைந்து காணப்படும் புகைமண்டலம் நிறைந்த வீதியில் பொதுமக்கள் அலறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மும்முரமான சந்தைக்கு அருகிலிருந்த கட்;டிடத்தின் மேல் தளம் இலக்குவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
7000 பேர் அந்த கட்டிடத்தில் அடைக்கலமடைந்திருந்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.குரான் ஒதிக்கொண்டிருந்தவேளை தாக்குதலில் இடம்பெற்றது சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என பெண்ணொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.அவர்கள் இந்த பாடசாலையை முன்னெச்சரிக்கையின்றி இலக்குவைப்பது இது நான்காவது தடவை என அவர் தெரிவித்துள்ளார். [எ]