இலங்கை
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு!
இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில், டெங்கு பரவும் அபாயம் உள்ள 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை இலக்காகக் கொண்டு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த் மருத்துவர்; “இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நேற்று முன்தினம் (12) வரை, 19,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக மே மாதத்தில் மாத்திரம், 2,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியின் அடிப்படையில், நாடளாவிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது – என்றார்.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைகளில், சுகாதாரத்துறை ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.