இலங்கை
இளைஞனை தாக்கி தலைமறைவாயிருந்த ”டீச்சர் அம்மா” நீதிமன்றத்தில் சரண்

இளைஞனை தாக்கி தலைமறைவாயிருந்த ”டீச்சர் அம்மா” நீதிமன்றத்தில் சரண்
தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா என்றும் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி , தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இளைஞர் ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கட்டான பொலிஸார், டீச்சர் அம்மாவின் கணவரையும் நிறுவனத்தின் தலைவரையும் கைது செய்தனர்.
பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று (13) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரைக் கைதுசெய்ய 3 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், இன்று (14) நீதிமன்றத்தில் சரணடையும் வரை டீச்சர் அம்மாவை கைது செய்ய முடியவில்லை.