பொழுதுபோக்கு
ரவி மோகன் – கெனிஷா சர்ச்சை; உண்மை ஒருநாள் வெளி வரும்: கெனிஷாவின் தோழி ஆர்த்திக்கு ஆறுதல்!

ரவி மோகன் – கெனிஷா சர்ச்சை; உண்மை ஒருநாள் வெளி வரும்: கெனிஷாவின் தோழி ஆர்த்திக்கு ஆறுதல்!
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனும் ஆன்மீக ஹீலர் கெனிஷா ஃபிரான்சிஸும் ஒன்றாகக் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த திருமணத்தில் அவர்கள் இருவரும் தங்க நிற உடையில் ஜோடியாகக் காணப்பட்ட நிலையில், இது குறித்து நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.ஆங்கிலத்தில் படிக்க: Kenishaa Francis’ friend comes in her support amid rumoured relationship with Ponniyin Selvan star Ravi Mohan: ‘How brutal, vulgar people can be’இது குறித்து ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்று உலகம் கவனமாக உருவாக்கப்பட்ட தோற்றங்களையும் புகைப்பட தலைப்புகளையும் பார்க்கும்போது, எங்கள் உண்மை நிலை மிகவும் வேறுபட்டது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் 18 வருடங்கள் காதலுடனும், விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர் என்னிடமிருந்து மட்டுமல்ல, அவர் ஒரு காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், கணவரிடமிருந்து எந்த நிதி உதவியும் இல்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், கெனிஷா ஃபிரான்சிஸின் தோழி விஜயந்தி ராஜேஷ்வர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நீண்ட உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாக நான் அமைதியாக இருந்தேன், நீங்களும் அமைதியாக இருந்ததாக கூறினீர்கள்.. இந்த கடினமான நேரம் உங்களுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் உங்களை தனியாகவும், எனது அன்பான ரவி அண்ணாவுடன் சேர்ந்தும் அறிந்திருக்கிறேன். இந்த சோதனையில் மக்கள் எவ்வளவு தவறாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், அருவருப்பானவர்களாகவும் இருக்க முடியும் என்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர், “நீங்கள் அனைவரும் கூறுவது போல் இல்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் கிண்ட், டைனாமிக் டேலண்ட், (kind, dynamic, talented) மற்றும் மிக முக்கியமாக உண்மையானவர். உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று எங்களுக்குத் தெரியும். தலை நிமிர்ந்து நீங்கள் எப்பொழுதும் இருப்பது போலவே இருங்கள்” என்று கூறியுள்ளார்.இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள கெனிஷா, “இதைச் சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறது, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே சமயம் ஆர்த்தி இந்த முடிவால் “திடுக்கிட்டதாக” கூறியது அப்போது பெரும் கவனத்தைப் பெற்றது.இந்தப் பிரிவுக்குப் பிறகு, ரவி மோகன் தனது ஆன்மீக ஹீலர் கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இவர்களது உறவே விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கெனிஷா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது வாடிக்கையாளர் ரவி மோகனுடன் தொழில்முறை உறவை மட்டுமே வைத்திருப்பதாக பலமுறை விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.