
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 14/05/2025 | Edited on 14/05/2025

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 50 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடைசியாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது கார்த்தி – நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே பாடகராகவும் வலம் வருகிறார். இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டும் அடித்துள்ளது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சந்தோஷ் நாராயணன் தனக்கு நேர்ந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நேற்று கொழும்பு தெருக்களில் கேஷுவலாக நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு இளம் டீனேஜர் பதட்டமாக என்னிடம் ஓடி வந்து அவசரமாக அவரது போனை எடுத்து ‘உதித் நாராயண் சார், உங்கள் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்றார். ஒரு பாடகராக அங்கீகரிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
I was casually walking the streets in Colombo yesterday. A young teenager came frantically running to me and took out his phone in a hurry … and said ‘Udit Narayan sir’ , I love your songs – I am so happy now to be recognised as a singer 😂😂.
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 14, 2025
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>