Connect with us

உலகம்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Published

on

Loading

காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

 

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து,  இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 52,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் – ஹமார் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது. 

Advertisement

இந்த போர் முடிவுக்கு வந்தது என உலக மக்களும், பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் காசா மக்கள் வாழ்வா? சாவா போராட்டத்தில் இருக்கின்றனர். 

இந்த சூழ்நிலையில், நேற்று முன் தினம் தங்கள் வசம் இருந்த பிணைக் கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்தது. ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழள்ளனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,908 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

  • திருமணத்தை மீறிய உறவு; மாமியார், மனைவியின் ஆண் நண்பரின் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்!

  • மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு; பாதுகாப்புப் படையினர் அதிரடி!

  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு!

  • பாய்லர் வெடித்து விபத்து; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன