Connect with us

சினிமா

1200 கொடுத்து படம் பார்க்க ரெடியா? சூடு பிடிக்கும் புஷ்பா 2 படத்தின் டிக்கெட் புக்கிங்..

Published

on

Loading

1200 கொடுத்து படம் பார்க்க ரெடியா? சூடு பிடிக்கும் புஷ்பா 2 படத்தின் டிக்கெட் புக்கிங்..

தென்னிந்திய சினிமாவில்  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு படமாக புஷ்பா 2 திரைப்படம் காணப்படுகின்றது. இந்த படம் எதிர் வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. புஷ்பா படத்தின் முதலாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களை பெற்றாலும் வசூலில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவானது.புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜுனுடன்  ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஏற்கனவே ஓவர்சீஸில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சொந்த ஊரான தெலுங்கானாவில் டிக்கெட் புக்கிங்கை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். அதிலும் முதல் நாள் புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்கு அதிகபட்சமாக 1200 ரூபாயை செலவு செய்ய வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.அதாவது புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிக்கான டிக்கெட் விலை 1200 ரூபாய் என்றும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை 531 என்றும்,  சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் 354 என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.சுமார் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் எடுக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே இருநூறு கோடி ரூபா வசூலை வாரிக் குவிக்கும் என்றும் அதிகபட்சமாக இந்த திரைப்படம் 1500 கோடி வரை வசூலிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன