Connect with us

பொழுதுபோக்கு

முத்துவுக்கு எதிரான ஆதாரம்; ரோஹினியை மாட்டிவிட்ட மனோஜ்: விஜயா ஆக்ஷன் மிரட்டல்!

Published

on

Muthu arun Ma

Loading

முத்துவுக்கு எதிரான ஆதாரம்; ரோஹினியை மாட்டிவிட்ட மனோஜ்: விஜயா ஆக்ஷன் மிரட்டல்!

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோஹினியை விஜயாவிடம் மாட்டிவிட, இந்த பக்கம் கான்ஸ்டபிள் அருண், முத்துவுக்கு எதிராக ஆதாரத்தை திரட்டியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், இன்ஸ்பெக்டரை பார்த்து அவரிடம் பேசிவிட்டு வெளியே வரும் முத்து, மீனாவிடம், நீ வீட்டுக்கு போ நான் செட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இந்த பக்கம், மனோஜ் சாப்பிட விஜயா பரிமாறிக்கொண்டு இருக்கிறார், அப்போது, நீ இந்த மாதிரி லேட்டா போனா கடையை யார் பாத்துக்குவாங்க என்று கேட்க, ரோஹினி தான் என்று மனோஜ் சொல்லிவிடுகிறான். இதனால் விஜயா கோபமாகிறார்.ரோஹினி கடைக்கு வருகிறாளா என்று கேட்க,  மனோஜ் சமாளித்தாலும் பிறகு, உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணியை கூப்பிட்டு நீ வேலைக்கு போனியா வந்தியானு இருக்கனும், இல்லன்னா கைய காலை ஒடச்சு வீட்டில் உட்கார வைத்துவிடுவேன் என்று திட்ட,ரோகிணி நான் கடைக்கு போகல என்று சொல்ல, நீ வாய தொறந்தாலே பொய்தான். ஆனா என் மகன் என்கிட்ட உண்மையை சொல்லிட்டான் என்று விஜயா சொல்ல, ரோகிணி அங்கிருந்து போகிறார்.இந்த பக்கம் மனோஜ் வந்தவுடன் ரோஹினி அவனை திட்ட, அம்மா மடக்கி மடக்கி கேள்வி கேட்டாங்க என்னால பொய் சொல்ல முடியல சொல்ல,  ரோகிணி இவனை இப்படியே விடக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகிறாள். மறுபக்கத்தில் செட்டுக்கு வந்த முத்து செல்வம் உள்ளிட்ட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க, அப்படியே சரக்கு அடிக்க அழைத்து சென்றுவிடுகிறான். குடித்துவிட்டு, லைசன்ஸ் எப்படி வாங்கி தருகிறோம் பார் என்று முத்துவை அழைத்து வருகின்றனர்.மறுபக்கத்தில் அருண் வீட்டிற்கு வரும் சீதா அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அருண் வருகிறார். பிறகு சீதாவும் அவருடைய அம்மாவும் வெளியே போன நேரத்தில் முத்து அவருடைய நண்பர்களுடன் அருண் வீட்டுக்கு வந்து சத்தம்போடுகின்றனர். வீட்டிற்குள் இருந்து வந்த அருண் நீ குடிச்சிட்டு தகராறு பண்ண வீட்டுக்கே வந்துட்டியா என்று  வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.அப்போது முத்துவின் நண்பர் ஒருவரை அருண் பிடித்து தள்ள அதனால் கோபமான முத்து அருனை அடிக்க போகிறார். பிறகு செல்வம் எல்லாரையும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன