இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார மிரட்டுகிறார்!

ஜனாதிபதி அநுரகுமார மிரட்டுகிறார்!
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்றைய தினம் (14) விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் தனது சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில்,
தங்களிடம் முன்றிலிரண்டு ( 2/3 ) பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.
அதிகாரம் கெடுவிக்கும் முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.
யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது எனவும் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.