Connect with us

தொழில்நுட்பம்

5000 mAh பேட்டரி, எச்.டி பிளஸ் டிஸ்பிளே… டஃப் கொடுக்கும் ‘Itel A90’: ரேட் எவ்வளவு பாருங்க!

Published

on

Itel A90 launched in India

Loading

5000 mAh பேட்டரி, எச்.டி பிளஸ் டிஸ்பிளே… டஃப் கொடுக்கும் ‘Itel A90’: ரேட் எவ்வளவு பாருங்க!

ஐடெல் நிறுவனத்தில் புதிதாக ஏ 90 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடெல் நிறுவனம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகள் என, வளர்ந்துவரும் நாடுகளின் மின்னணு சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடங்களை ஐடெல் தயாரிப்பு பெற்றுள்ளன. இந்நிலையில், புதிதாக ஐடெல் ஏ 90 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.4ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, நீர்புகாத் தன்மை மற்றும் தூசு தடுப்பான்களைக் கொண்டிருக்கும் வகையில் ஐபி57 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏவியானா 2.0 என்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.6,499 விலைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் இந்த சிறப்பம்சங்கள் இடம்பெறுவது அரிதானது.ஐடெல் ஏ 90 விலை, சிறப்பம்சங்கள் என்ன?ஐடெல் ஏ 90 ஸ்மாட்போனானது 6.6 அங்குல திரையுடன், மிகுந்த சுமூகமாகப் பயன்படுத்தும் வகையில் 90Hz திறன் கொண்டது. இதில் T7100 என்ற புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் 10W சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 13MP கேமராவும் முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. மேலும், ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display), ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களுக்காக டைனாமிக் பார் (Dynamic Bar) போன்ற அம்சங்கள் உள்ளன. வெட் டச் (Wet Touch) மற்றும் ஆய்லி டச் (Oily Touch) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஆன்டி டிராப் கேஸ் (Anti-Drop Case) கிடைக்கிறது.டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-facing Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் ஜி சென்சார் (G Sensor) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium), நெபுலா ப்ளூ (Nebula Blue) கலர்கள் வருகின்றன.இந்த ஐடெல் ஏ90 போனின் விலையை பார்க்கையில் 4 ஜிபி ரேம் +64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன