சினிமா
நான் சம்பாதிக்க… ஆர்த்தி சல்சா போடுற மாதிரி செலவழிச்சாங்க..! வேதனையில் ஜெயம் ரவி..!

நான் சம்பாதிக்க… ஆர்த்தி சல்சா போடுற மாதிரி செலவழிச்சாங்க..! வேதனையில் ஜெயம் ரவி..!
தமிழ் சினிமா வட்டாரங்களிலேயே இந்த வாரம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக, நடிகர் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை காணப்படுகின்றது. கடந்த சில மாதங்களாகவே, அவரது குடும்ப விவகாரம் தொடர்பாக செய்திகள், பேச்சு வார்த்தைகள் என்பன சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. ஆனால் தற்போது, நடிகர் ரவி மோகன் தானாகவே அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, இது தற்பொழுது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமண விழாவில், நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஜோடியாக பங்கேற்றது தான் இந்த விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் அவர்கள் குறித்து பல வதந்திகளும் எழுந்துள்ளன.இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போன்று ஒரு பதிவினை வெளியிட்டார். அந்தக் கருத்து உணர்ச்சியுடனும், ஆதங்கத்துடனும் நிரம்பியதாக இருந்தது.இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு பக்கம் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மற்றொரு பக்கம் ரவி மோகனை விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சமாதானமாக இருந்த நடிகர் ரவி மோகன், தற்போது முழு விவகாரத்தையும் வெளிக்கொண்டு வருவதாக, தனது தனிப்பட்ட அறிக்கையில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.ரவி மோகன் வெளியிட்ட அறிக்கையில், “தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை. மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல. இவ்வளவு நாள்களாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா. எனது குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர்.” என்று மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கூறியுள்ளார்.