Connect with us

சினிமா

சக்காளத்திக்கு ஆதரவாக பாக்கியா சொன்ன அதிரடி முடிவு.? உணர்வு பூர்வமான கதைக்களம்

Published

on

Loading

சக்காளத்திக்கு ஆதரவாக பாக்கியா சொன்ன அதிரடி முடிவு.? உணர்வு பூர்வமான கதைக்களம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.ஏற்கனவே கோபி ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் நிலையில் அவருக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிகின்றது. இந்த விஷயத்தை இறுதியாக தெரிந்து கொண்ட ராதிகா ஹாஸ்பிடல் வந்த போதும் அவரை ஈஸ்வரி தடுத்து நிறுத்தி பார்க்க விடவில்லை.இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் பாக்யாவுடன் கொஞ்சம் கதைக்க வேண்டும் என்று ராதிகா சொல்லுகின்றார். இதனால் வாங்க அமர்ந்து பேசலாம் என்று அவரை அழைத்துச் செல்கின்றார் பாக்கியா.இதன் போது ராதிகா உங்க குடும்பத்தோட இருந்த வரைக்கும் கோபி சந்தோஷமா இருந்தாராம்.. நான் சந்தோஷமா இல்ல.. அவர் குடும்பத்தை பேஸ் பண்ணியே எனது வாழ்க்கை போய்க்கொண்டு இருக்குது.. எனக்குன்னு எதுவுமே இல்ல.. நான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கக் கூடாது என்று தனது மனதில் உள்ளவற்றை பாக்யாவிடம் சொல்லி அழுகின்றார்.இதன்போது ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவருடைய கண்ணீரை துடைத்து விட்டு  நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.. எல்லாம் சரியாக விடும் என்று ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லுகின்றார். இதன்போது ராதிகா பாக்கியாவின் தோலில்  சாய்ந்து மனதை தேற்றிக் கொள்கின்றார். இதுதான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியான புதிய ப்ரோமோ.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன