இந்தியா
Fengal Cyclone | கனமழை எதிரொலி: ‘பிக் பாஸ்’ வீட்டை சூழ்ந்த வெள்ளம்…

Fengal Cyclone | கனமழை எதிரொலி: ‘பிக் பாஸ்’ வீட்டை சூழ்ந்த வெள்ளம்…
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை மாநகரம் முழுவதும் கனமழை பெய்து, பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறிய தண்ணீர் சென்னை – பெங்களூரு தேசிய நெஞ்சாலையை மூழ்கடித்தது.
செம்பரம்பாக்கத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தளத்திலும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.
சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளில் ஊராட்சி நிர்வாகத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.