Connect with us

பொழுதுபோக்கு

தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் வீட்டில் இ.டி ரெய்டு; காரணம் என்ன? பரபரப்பான தமிழ் சினிமா வட்டாரம்!

Published

on

Akash Baskaran

Loading

தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் வீட்டில் இ.டி ரெய்டு; காரணம் என்ன? பரபரப்பான தமிழ் சினிமா வட்டாரம்!

தனுஷ், சிம்பு மற்றும் சிவகார்த்திககேயன் படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மார்ச் மாதம், தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டததில் ரூ100 கோடிக்கு அதிகமாக முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை முதல், டாஸ்மாக் அதிகாரிகளின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை தேனாம்பேட்டை, தி.நகர், சேத்பட், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் கால்ஷீட் பெற்று பல படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ்பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை, சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகி வரும் பராசக்தி, சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தனது டவுன் பிச்சர்ஸ் மூலம் தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன், அதர்வா நடிப்பில் தயாராகி வரும் இதயம் முரளி என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பாஸ்கர் என்பவரின் மகன்தான் இந்த ஆகாஷ் பாஸ்கரன்.சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைத்துறையின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். தற்போது இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சோதனை தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன