வணிகம்
Mutual Funds: கடந்த 5 ஆண்டில் 25% ரிட்டன்… மியூச்சுவல் ஃபண்ட் இவைதான்; முதலீடு செய்யும் முன் இத செக் பண்ணுங்க!

Mutual Funds: கடந்த 5 ஆண்டில் 25% ரிட்டன்… மியூச்சுவல் ஃபண்ட் இவைதான்; முதலீடு செய்யும் முன் இத செக் பண்ணுங்க!
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, முதலீட்டாளர்கள் ஒரு திட்டத்தின் வருமானத்தை அதே வகையிலுள்ள மற்ற திட்டங்களின் வருமானத்துடன் ஒப்பிடுவது வழக்கம்.மிக அதிகப்படியான வருமான உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டாலும், காலப்போக்கில் ஒரு திட்டத்திலிருந்து ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய வருமானம் குறித்த நியாயமான யோசனையை இது வழங்குகிறது. கடந்த கால வருமானங்களைத் தவிர, நிதி மேலாளரின் கடந்த கால செயல்பாடு (செயல்பாட்டில் உள்ள திட்டமாக இருந்தால்), நிதி நிறுவனத்தின் நற்பெயர், திட்டத்தின் வகை மற்றும் சந்தையின் ஒட்டுமொத்த சூழ்நிலை போன்ற பிற காரணிகளையும் ஒருவர் கருத்தில் கொள்ளலாம்.மியூச்சுவல் ஃபண்ட்இதில், ஃபோக்கஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்களின் கடந்த கால வருமானங்களை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். ஃபோக்கஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பது அதிகபட்சம் 30 பங்குகளில் குறைந்தபட்சம் 65 சதவீதம் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்யும் திட்டங்களைக் குறிக்கிறது.இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் சங்கம் (AMFI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 28 திட்டங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச வருமானத்தை HDFC Focused 30 Fund வழங்கியுள்ளது என்பதை மேலே உள்ள அட்டவணையில் நாம் காண முடிகிறது. இது 32.18 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.நிப்பான் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் 27.30 சதவீத வருமானத்தையும், குவான்ட் ஃபோகஸ்டு ஃபண்ட் 25.50 சதவீத வருமானத்தையும், டாடா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் 24.58 சதவீத வருமானத்தையும் அளித்துள்ளன.குறிப்பாக, கடந்த கால வருமானங்கள் பொதுவாக ஒரு திட்டத்தின் எதிர்கால செயல்திறனை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஏனெனில், அதிகப்படியான வருமானம் எதிர்காலத்தில் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எளிமையாக கூறுவதானால், ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கடந்த காலத்தில் நல்ல வருமானத்தை அளித்திருந்தாலும் – அது எதிர்காலத்திலும் அதே வருமானத்தை வழங்கும் என்று அர்த்தமல்ல.