Connect with us

இலங்கை

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழி கவனயீர்ப்பை அடக்க நிர்வாகம் நடவடிக்கை

Published

on

Loading

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழி கவனயீர்ப்பை அடக்க நிர்வாகம் நடவடிக்கை

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து நேற்று
முன்தினம் தொடக்கம் அமைதியான வழியில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு
போராட்டத்தை பொலீஸாரை கொண்டு நீதி மன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்று
அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையினை
ஏற்படுத்தியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இங்கே பொதியிடுங்கள்,அம்பாந்தோட்டை,
புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பு கொண்டு செல்வதனை நிறுத்தி ஆனையிறவில்
பொதியிடுங்கள், தொழிலாளர்களுக்கு தினமும் வேலையை வழங்க வேண்டும்,
தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதனை நிறுத்த வேண்டும், உப்பள
முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும்,தொழிலாளர்களுக்கான ஒரு
தொழிற்சங்கத்தை இயங்கவிடு, ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என
மாற்றம் செய் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் பந்தல்
அமைத்து எமது கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

Advertisement

இந்த கனயீர்ப்பு போராட்ட அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலீஸார் ஊடாக
நீதி மன்றின் கவனத்திற்க கொண்டு சென்று எமது கனயீர்ப்பு போராட்டத்தை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதன் மூலம் இங்கிருந்து கட்டி
உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்திற்கு
எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். எனவே இதனை நாம்
வன்மையான கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தனர்

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1747421353.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன