இலங்கை
மனைவியை சுட்டு உயிரை மாய்க்க முயன்ற கணவன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியை சுட்டு உயிரை மாய்க்க முயன்ற கணவன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
கணவன் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் நேற்ரு (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இலங்கையில் துப்பாகிச்சூடு சமபவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்பதகறாரில் மனைவியை கணவன் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.