இலங்கை
வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் மெத்தனம்; ஆபத்தான நிலையில் மக்கள் பயணம்

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் மெத்தனம்; ஆபத்தான நிலையில் மக்கள் பயணம்
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்துவீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியாவில் இன்று (17) காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக பூந்தோட்டம் சந்தியில் வீதிக்கரையில் நின்ற தென்னைமரம் முறிந்து மின்னார வயரின் மீது வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இது தொடர்பாக மின்சாரசபைக்கும். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் மரம் முறிந்து நான்கு மணி நேரம் கடக்கின்ற நிலையிலும் அது இன்னமும் அகற்றப்படவில்லை.
குறித்த மரம் பாதையின் நடுவில் ஆபத்தான முறையில் காணப்படுவதுடன் , பொதுமக்கள் அதனூடாகவே பயணம் செய்து வருகின்றனர்.