சினிமா
உடல் எடை குறித்து பேசிய பத்திரிகையாளர்…! பதில் அளித்த விஜய் சேதுபதி…!

உடல் எடை குறித்து பேசிய பத்திரிகையாளர்…! பதில் அளித்த விஜய் சேதுபதி…!
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோ விஜய் சேதுபதி. இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தனது ACE திரைப்படத்தின் ஊடகவியளார் சந்திப்பில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் ருக்மணி வசந்த் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ் மற்றும் பப்லு பிரிதிவீராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.ACE திரைப்படத்திற்கான பிரஸ் மிட் இன்றய தினம் நடை பெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் பத்திரிக்கையாளார்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தித்துள்ளார்.அதாவது “உடல் எடை குறித்து கேட்ட கேள்விக்கு நான் ஜிம்முக்கு போய் வேர்க் கவுட் பண்ணுவான் என்றும் சில சாப்பாடு ஒத்து கொள்ளவில்லை அது வேண்டாம் என்று தவிர்ப்போன், முயற்சி பண்ணுவன் முடியலன்னா சாப்பிடுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.