விளையாட்டு
RCB vs KKR LIVE SCORE: வெற்றியுடன் தொடங்குமா ஆர்.சி.பி? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

RCB vs KKR LIVE SCORE: வெற்றியுடன் தொடங்குமா ஆர்.சி.பி? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றஇந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 Today Match, RCB vs KKR LIVE SCOREஇந்நிலையில், போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி இன்று சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேருக்கு நேர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தப் போட்டிகளில் 15-ல் பெங்களூரு அணியும், 21-ல் கொல்கத்தா அணியும் வென்றுள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.