சினிமா
GT4 பந்தயத்தில் அஜித் பர்சனல் பெஸ்ட் சாதனை.! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்.!

GT4 பந்தயத்தில் அஜித் பர்சனல் பெஸ்ட் சாதனை.! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் இதயத்தில் தனிச்சாதனையாளராக உள்ளவர் நடிகர் அஜித் குமார். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், ரேஸிங் வீரராகவும் தனது பன்முகத் திறமைகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார். தற்போது அவர் GT4 European Series கார் பந்தயத்தில் கலந்து கொண்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதுவரை பல்வேறு பேச்சுக்களுக்கு இடையில் இருந்த அவரது பந்தயப் பயணம், நேற்று நடைபெற்ற போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அஜித், மூன்றாவது சுற்றை வெறும் ஒரு நிமிடம் 48 விநாடிகளில் கடந்து, தனது பர்சனல் பெஸ்ட் லேப் டைமிங் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.GT4 என்பது ஒரு சர்வதேச அளவிலான ஜிடி ரேசிங் தொடரில் தொழில்முறை ரேஸிங் டிரைவர்களும், தனிநபர் ஒத்துழைப்பு கொண்ட அணிகளும் பங்கேற்கின்றனர். முக்கியமாக, இது FIA அங்கீகரிக்கப்பட்ட போட்டி. அத்தகைய போட்டியில் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார் என்பது ரசிகர்கள் அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகவல்கள் தற்பொழுது இன்ஸ்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.