விளையாட்டு
RR vs PBKS LIVE: கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்.. யாருக்கு வெற்றி?

RR vs PBKS LIVE: கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்.. யாருக்கு வெற்றி?
நடப்பு ஐ.பி.எல். தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தியா-பாக்., இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒருவார காலம் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்த நிலையில் ஐ.பி.எல். மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று, பெங்களூரு – கொல்க்கத்தா ஆட்டம் மழையால் தடைபட்டது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் 3.30-க்கு ஆட்டம் தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பஞ்சாப் பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் 6 புள்ளிகளை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), குணால் சிங் ரத்தோர், துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் சிங் டெக்வேக்னா ஆர்ச்சர், மஹேஷ்த் தெக்வாஷ்வால்.பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், யுஸ்வேந்திர சிங் சாஹல், அர்ஷ்தீப் சிங்.ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பிட்ச் சற்று கடினமாகவும், லேசான புற்களும் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பந்து எளிதாக பேட்டில் வந்து சேரும். இதனால், பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி பெய்ய வாய்ப்பு உள்ளது, இது பந்து வீச்சாளர்களுக்கு சிக்கல்களை அதிகரிக்கும். சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இதுவரை 61 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 22 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.