வணிகம்
ஒரு முறை முதலீடு; ஒவ்வொரு மாதமும் வருமானம்: இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமை செக் பண்ணுங்க

ஒரு முறை முதலீடு; ஒவ்வொரு மாதமும் வருமானம்: இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமை செக் பண்ணுங்க
முற்றிலும் பாதுகாப்பான அரசு திட்டத்தில் இருந்து மாதாந்திர வருமானத்தை நம்மால் எளிதாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதன்படி, அஞ்சல் அலுவலகங்களில் மாதாந்திர வருமான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1000-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை நம்மால் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான வங்கிகளை விட அதிகமான வட்டியாக கருதப்படுகிறது.சில சந்தர்ப்பங்களில் ஒரு குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். உதாரணமாக, ஓய்வூதிய தொகை மொத்தமாக கிடைக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கும் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.இப்படி முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கும். அதனடிப்படையில் ரூ. 9 லட்சத்தை இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 5,500 வரை வருமானம் கிடைக்கும்.மேலும், இதன் முதிர்வு காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், மொத்த முதலீட்டு தொகையான ரூ. 9 லட்சத்தையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் வட்டி வருமானத்திற்கு டி.டி.எஸ் பிடித்தமும் கிடையாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.அதனடிப்படையில், ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இது நம்முடைய நிதி பாதுகாப்பை உறுதி செய்து, நமது செலவினங்களை பார்த்துக் கொள்வதற்கு வழிவகுக்கிறது.