இலங்கை
மன்னாரில் கரையொதுங்கிய சடலம்!

மன்னாரில் கரையொதுங்கிய சடலம்!
மன்னார், அச்சங்குளம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
முற்றிலும் சிதைவடைந்துள்ள அந்தச் சடலத்தை அந்தப் பகுதிக்கு நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அச்சங்குளம் கிராம அலுவலருக்கு அறிவித்ததை அடுத்து, கிராம அலுவலர் பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முருங்கன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.