பொழுதுபோக்கு
அடியாட்களை வைத்து காதலன் மீது தாக்குதல்; தாயை வணங்க தங்கையை விடாத அண்ணன்: அடுத்து என்ன?

அடியாட்களை வைத்து காதலன் மீது தாக்குதல்; தாயை வணங்க தங்கையை விடாத அண்ணன்: அடுத்து என்ன?
நெருக்கடி கொடுக்கும் மாப்பிள்ளை.. வெற்றிக்கு ஷாக் கொடுத்த துளசி – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் துளசி வெற்றியை சந்தித்து தாலியை எடுத்து நீட்டி இதற்கு காரணமானவனை நீங்கதான் கண்டுபிடிக்கணும் என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று, வெற்றி துளசிக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நிற்கிறாள். இதனைத் தொடர்ந்து ரேவதி முருகனுக்கு காப்பு ஒன்றை கிப்ட்டாக வாங்கி அவனது கையில் போட்டு விடுகிறாள். இதனால் முருகன் சந்தோஷப்படுகிறான்.அதைத்தொடர்ந்து மகேஷ் ஐடி பார்க் கட்டுவதற்காக ஒரு இடத்தை பார்க்க வந்திருக்க இது தர்மகத்தா வரதராஜன் இடம், அவர் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று சொல்ல மகேஷ் அப்செட் ஆகிறான். அஞ்சலிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அஞ்சலி அந்த இடம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். நீங்க இடத்துக்கு சொந்தக்காரர் நேர்ல சந்திச்சு பேசுங்க என்று ஆறுதல் சொல்ல மகேஷ் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறான்.பிறகு மகேஷ் வரதராஜன் வீட்டுக்கு வந்து தனது திட்டத்தை சொல்லி இடத்தை கேட்டு பேசி ஒரு நல்ல பதிலா சொல்லுங்க என்று சொல்கிறான். பிறகு மோனிகா துளசியின் மாப்பிள்ளை கூப்பிட்டு சீக்கிரம் கல்யாணம் நடத்த சொல்லு என்று சொல்ல அவன் சிவராமனுக்கு போன் போட்டு அழுத்தம் கொடுக்கிறான். சிவராமன் துளசியுடன் இது குறித்து பேச துளசி தியாவோட உடல்நிலை தான் இப்போ முக்கியம். அதனால ரெண்டு மாசம் டைம் கேளுங்க என்று சொல்லி விடுகிறாள்.பிறகு லட்சுமி ரூமுக்கு வந்ததும் சிவராமனிடம் உங்களுக்கு தான் இரண்டு வருஷம் சர்வீஸ் இருக்குல, கொஞ்சம் பணத்தை கேளுங்கள். துளசி கல்யாணம் தான் முக்கியம் என சொல்ல வேலை இல்லாமல் இருக்கும் சிவராமன் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சௌந்தரபாண்டி செய்த சதி.. திதியில் கலந்து கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் இசக்கி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சூடாமணிக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடக்க, வைஜெயந்தி திட்டமொன்றை தீட்டிய நிலையில் இன்று, வைஜெயந்தி தனது மகன் கௌதமை ஸ்டேஷனுக்கு வர வைக்கிறாள். பிறகு வீராவின் வண்டியை பஞ்சர் செய்ய சொல்லி இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறாள். அதன் பிறகு வீராவுக்கு அனுமதி கொடுக்க அவள் வண்டியை எடுக்க வர வண்டி பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.இந்த சமயத்தில் அங்கு வந்த கௌதம் அவளுக்கு லிப்ட் கொடுப்பதாக சொல்லி அழைத்து கொண்டு கிளம்புகிறான். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி இசக்கி போக விடாமல் செய்ய திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதாவது முத்துப்பாண்டி வேலையில் இருக்க சௌந்தர பாண்டி இசக்கி அழைத்துக்கொண்டு வேண்டுமென்று காரை மெதுவாக ஓட்டுகிறார்.அதன் பிறகு சிவபாலன் அவரை நகர சொல்லிவிட்டு காரை போட்டு உட்கார கார் பெட்ரோல் இல்லாமல் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கிறது. சிவபாலன் பெட்ரோல் பங்க் செல்ல இசக்கி முத்து பாண்டிக்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறாள். வீரா கௌதம் உடன் வந்து இறங்க சண்முகம் இவன் கூட எதுக்கு வந்த என்று கேட்க வண்டி பஞ்சர் ஆகி விட்டதாக சொல்கிறாள்.கௌதம் நல்லவன் போல வேஷம் போட்டு சூடாமணி போட்டோவை தொட்டு வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு திதி கொடுக்கவும் தொடங்க இசக்கி நேரமாவதால் காரில் இருந்து இறங்கி வேக வேகமாக நடக்க தொடங்குகிறாள். அதற்குள் இங்கே திதி கொடுத்து முடித்து பிண்டத்தை கரைத்து விடுகின்றனர். லேட்டாக வந்த இசக்கியை சண்முகம் திட்டி விடுகிறான். இதனால் இசக்கி கண்கலங்கி நிற்கிறாள்.அதன் பிறகு போட்டோவாவது தொட்டு கும்பிடலாம் என்று செல்ல சண்முகம் போட்டோவை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட இசக்கி கண்ணீர் விட்டு அழுதபடி நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஜோடியாக வந்த கார்த்திக், ரேவதி.. அடியாட்களை நாடிய துர்கா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று, கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மகேஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். டாக்டர் மல்லிகா இதே ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் வந்து இருக்க அவரைப் பார்ப்பதற்காக சாமுண்டீஸ்வரி வருகிறாள்.இதனைத் தொடர்ந்து துர்கா ரவுடிகளை ஏற்பாடு செய்து நவீனை அடிக்க பணம் கொடுக்கிறாள். ரவுடிகள் நவீனை அடிக்க பாக்க நவீன் என்னை நீங்க அடிக்க வேண்டாம். துர்கா எவ்வளவு பணம் கொடுத்தாளோ அதே பணத்தை நான் தரேன் என்ன நல்லா அடிச்சதா மட்டும் சொல்லுங்க என்று சொல்லி ரவுடிகளை தன் பக்கம் இழுக்கிறான். அதன் பிறகு நவீன் ரவுடிகளால் அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்கும் விஷயம் தெரிந்து துர்கா அவனைப் பார்க்க வருகிறாள்.கை, காலில் கட்டுக்களுடன் ஹாஸ்பிட்டலில் நவீன் படுத்திருக்க அவனைப் பார்த்ததும் துர்கா வருத்தம் அடைகிறாள். அவனிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். யமுனாவின் தோழி ரேவதிக்கு போன் போட்டு அவளை ஒரு நிகழ்ச்சியில் பாட வைக்க சொல்லி கேட்க கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் யமுனாவை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். துர்கா வெளியில் வந்ததும் நவீன் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு மயில்வாகனத்துடன் போனில் பேசுகிறான்.துர்கா தனது செல்போனை மறந்து வைத்து விட்டு வந்ததால் அதை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.