இலங்கை
காட்டுமிராண்டித்தனமாக செய்யப்படுபவர்களை தடுத்து நினைவேந்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும்

காட்டுமிராண்டித்தனமாக செய்யப்படுபவர்களை தடுத்து நினைவேந்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும்
என்.வி.சுப்பிரமணியம்!
எமது நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மூகமாக இம்முறை நினைவேந்தல் செய்வதற்கு எமது மக்கள் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நினைவேந்தலை குழப்பும் வகையில் சிங்கள இனவெறிபிடித்தவர்களின் கைக்கூலிகள் செயற்பட்டிருந்தமை மிகவும் வேதனைக்குரிய விடயம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிணமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அனுமதி இல்லாமல், சிங்கள மக்களே இல்லாத வட பகுதியில் பல விகாரைகளை கட்டுகின்றார்கள். தனியாரின் காணிகளை அடாத்தாக அபகரித்து அதில் விகாரை கட்டுகின்றீர்கள். அதனை கேட்க வந்தால் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றீர்கள்.
இறந்துபோன பிள்ளைகளை நினைவுகூருவதற்கு இந்த அரசாங்கத்தில் அனுமதி இல்லை. சமத்துவம், சமாதானம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கட்சிக்கு மக்கள் நம்பி வாக்களித்துள்ள நிலையில், இறந்தவர்களை நினைவுகூருவதை தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை.
நாமும் இந்த இலங்கை நாட்டு மக்கள் என்ற வகையில், நாட்டின் எந்த இடத்திலேயாவது இந்த நினைவேந்தலை வருடா வருடம் செய்வதற்கு இந்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லோருக்கும் இருக்கும் சுதந்திரம் போல எமக்கும் சுதந்திரத்தை தந்து நினைவேந்தலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக செயல்படுபவர்களை கட்டுப்படுத்தி, கைது செய்து இவ்வாறான செயற்பாடுகளை செய்ய விடாது தடுக்க வேண்டும் என்றார்.