டி.வி
ஹீரோ கேரக்டர் மாற்றம்; மனசெல்லாம் சீரியல் புது நாயகன் இவர் தான்: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஹீரோ கேரக்டர் மாற்றம்; மனசெல்லாம் சீரியல் புது நாயகன் இவர் தான்: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மனசெல்லாம். இந்த சீரியலில் அருள் கதாபாத்திரத்தில் ஜெய் பாலா நடிக்க கரிகாலன் கதாபாத்திரத்தில் தீபக்குமார் நடித்து வருகிறார்.மேலும் நாயகிகளாக வெண்பா மற்றும் பரமேஸ்வரி ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்துடன் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் திடீரென மணமேடையில் ஜோடி மாறி திருமணம் நடைபெற்றது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிலையில் அருள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெய் பாலா சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள எபிசோடிகளில் சுரேந்தர் அருள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஜெய் பாலாவின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் சுரேந்தர் சரியான தேர்வாக இருப்பார் என வாழ்த்து கூறி வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த இநத சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது கேரக்டர் மாற்றம் சீரியலில், என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.