Connect with us

சினிமா

ஆர்த்தியின் விவகாரத்திற்கு தனுஷ் காரணமா.?சுசித்திராவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த அந்தணன்

Published

on

Loading

ஆர்த்தியின் விவகாரத்திற்கு தனுஷ் காரணமா.?சுசித்திராவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த அந்தணன்

தமிழ் சினிமாவில் தற்பொழுது, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள விவாகரத்து வழக்கு மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுந்த கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் வதந்திகளும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில், வலைப்பேச்சு வீடியோப் பதிவுகள் மூலம் சமூக விமர்சகர் மற்றும் கருத்துப் பகிர்வாளரான அந்தணன், சமீபத்திய ஒரு நேர்காணலில் ஜெயம் ரவி குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தணன் பேசியபோது, மிகவும் சுவாரஸ்யமாகவும், சிந்திக்க வைக்கும் விதமாகவும் புளூ சட்டை மாறன் கூறிய கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.அதன்போது அவர் கூறியதாவது,  ” நேற்று புளூ சட்டை மாறன் டுவிட்டரில் எப்படியாவது இந்த ஆர்த்தி- ஜெயம் ரவி பிரச்சனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.”  இந்தக் கருத்துக்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும் ரெண்டு குடும்பம் தொடர்பான இந்த வழக்கினைப் பார்க்கும் போது உண்மையிலேயே மனவருத்தமாக இருக்கு எனக் கூறினார் அந்தணன்.அந்தணன் தனது உரையில் ஜெயம் ரவியின் வாழ்க்கை வளர்ச்சி, திரையுலக நிலை ஆகியவற்றையும் நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினார். மேலும் “ஜெயம் ரவி மாதிரி ஒரு நிலைக்கு வருவது எளிதல்ல. அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மரியாதை கொடுப்பதென்பது எல்லாருக்கும் கிடைத்துவிடும் விஷயம் அல்ல.” என்றார். அத்துடன் ஜெயம் ரவிக்கு நேர்ந்த இந்தப் பிரச்சனை பல முன்னணி ஹீரோக்களுக்கும் வந்திருக்கிறது என்றும் அந்தணன் குறிப்பிட்டார். குறிப்பாக, “இதே மாதிரி பிரச்சனை ரஜினிக்கும் குழந்தை பிறந்த பின் ஏற்பட்டது. அந்தநேரத்தில் அவர் எடுத்த முடிவு ஜெயம் ரவி எடுத்த முடிவுக்கும் ஒத்ததாகத் தான் இருந்தது. ஆனால், பாலச்சந்திரன் கூறிய ஒரே வார்த்தைக்காக ரஜினி தனது மனதை மாற்றினார்.” என்றார். மேலும் அந்தணன், இந்தப் பிரச்சனையில் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களது கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நடுவில சில பேர் குளிர் காஞ்சு கொண்டிருக்கிறார்கள் என்றார். அதேசமயம், ஜெயம் ரவி குறித்து சுசித்திரா பேசிய விடயம் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது எனவும் கூறியிருந்தார். சுசித்திரா தற்பொழுது ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவிற்குக் காரணம் தனுஷா.? எனக் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த பின்னர் அந்தணன், “நான் இது என்னடா சும்மா எல்லாத்திற்கும் தனுஷை இழுக்கிறார்கள் என ஜோசித்ததாகவும் இது எந்த விதத்தில நியாயம்.” எனவும் கேட்டிருந்தார். மேலும் இந்தப் பிரச்சனை குறித்து பேசித் தீர்க்க வேண்டியது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான் என்கிறார் அந்தணன். அந்தவகையில், வலைப்பேச்சு வீடியோ மூலம் மக்களுக்கு உண்மையான கருத்துக்களைப் பகிர்ந்த அந்தணன், இன்று மிகவும் சிறப்பான பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன