இலங்கை
யாழில் மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யாழில் மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மழை அனர்த்தத்தால் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜே/06 கிராம சேவகர் பிரிவில் அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதேநேரம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/304 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் ஜே/305 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.