சினிமா
மீண்டும் இணைந்த 90s ஜோடி..! முதல் சிங்கிள் விரைவில்..

மீண்டும் இணைந்த 90s ஜோடி..! முதல் சிங்கிள் விரைவில்..
சரத்குமார், தேவயானி மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘3 BHK’ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் மேல் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாட லான ‘கனவெல்லாம்’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இந்த பாடல் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இதைவிட பட ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இது சினிமா ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் கோடை விடுமுறையில் படம் வெளியாவதால் அதிக வசூலை திரட்டி தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நீண்டகால இடைவெளியின் பின்னர் சரத்குமார் மற்றும் தேவையனை இணைந்து படம் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.