இலங்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய 4 பேர் கொண்ட குழு நியமிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய 4 பேர் கொண்ட குழு நியமிப்பு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
மூத்த மேலதிக மன்றாடியார் நாயகம் ரோஹந்த அபேசூரிய இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இதில் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஸ், மூத்த அரச சட்டவாதி ஜெயனி வேகொடபொல மற்றும் அரச சடவாதி சக்தி ஜகொடஆரச்சி ஆகியோர் அடங்குவர்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், அறிக்கையில் வழங்கப்பட்ட சான்றுகள் குற்றவியல் வழக்குகளைத் தொடங்க போதுமானதா என்பதைத் தீர்மானிக்கும் பணியும் இந்தக் குழுவிற்கு உள்ளது.
முகநூலில் கிழக்கு ஏப்ரல் 29 அன்று பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மேலதிக ஆய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ மார்ச் 14 அன்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, அது அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார்.
இது 1988/90 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றியது இந்த அறிக்கை. ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியேற்றதும், இந்த சம்பவங்களை விசாரிக்க செப்டம்பர் 21, 1995 அன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவினார்.
பட்டலந்த ஆணைக்குழு என்று அழைக்கப்படும் இது, பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் ஆட்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், சித்திரவதை செய்தல், படுகொலை செய்தல் மற்றும் காணாமல் போனதை ஆராயும் பணியை மேற்கொண்டது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆதாரங்களை சேகரித்த பிறகு, ஆணைக்குழு 1998 இல் ஜனாதிபதி குமாரதுங்கவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, ஆனால் பட்டலந்த கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.