இலங்கை
வடக்கு மாகாண ஆளுநருக்கும் வடக்கு கடற்படைத் தளபதிக்குமிடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநருக்கும் வடக்கு கடற்படைத் தளபதிக்குமிடையே சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (19) காலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.