Connect with us

இந்தியா

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மின்சார காரை அறிமுகப்படுத்தும் டாட்டா நிறுவனம்!

Published

on

Loading

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மின்சார காரை அறிமுகப்படுத்தும் டாட்டா நிறுவனம்!

இந்தியாவின் மிகக் குறைந்த விலை காரான டாட்டா நானோ தனது புதிய மின்சார காரை (EV) வெறும் 1 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவுக்கு சந்தைக்கு அறிமுகப் படுத்துகிறது

டாட்டா நானோ மின்சார அவதாரத்தில் மறுபிறவி? இந்திய வாகன வரலாற்றில் புதிய அத்தியாயம் இந்திய வாகன உலகில் டாட்டா நானோ ஒரு புரட்சிகரமான முயற்சியாக 2008-ல் அறிமுகமானது. 

Advertisement

“ஒரு லட்ச ரூபாய் கார்” என்று அழைக்கப்பட்ட இந்த வாகனம், இரு சக்கர வாகனங்களை மட்டுமே வாங்க முடிந்த இந்திய குடும்பங்களுக்கு மலிவு விலையில் பாதுகாப்பான நான்கு சக்கர வாகனத்தை வழங்க வேண்டும் என்ற ரத்தன் டாட்டாவின் கனவை உருவாக்கியது.

 ஆனால், வணிக ரீதியாக இந்த முயற்சி பல சவால்களை எதிர்கொண்டாலும், மக்களுக்கு வாகன வசதியை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற அதன் தொலைநோக்கு இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

2008 முதல் 2018 வரை நானோ பல மாற்றங்களைப் பெற்றது. பவர் ஸ்டியரிங், திறக்கக்கூடிய பின்பகுதி கதவு, ப்ளூடூத் இணைப்பு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போன்ற வசதிகள் ஜென்எக்ஸ் மாடலில் சேர்க்கப்பட்டன. ஆனாலும், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால், உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Advertisement

*மின்சார நானோ: புதிய கனவு*

இந்தியா மின்சார வாகன எதிர்காலத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் இன்றைய சூழலில், டாட்டா நானோ மின்சார வாகனமாக (EV) மறுபிறவி எடுக்கும் என்ற ஊகங்கள் வலுவடைந்துள்ளன. இது வெறும் பழைய பெயரை மீட்டெடுப்பது மட்டுமல்ல; நவீன தொழில்நுட்பத்துடன் ரத்தன் டாட்டாவின் அசல் கனவை மீண்டும் நனவாக்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

வாகன ஆர்வலர்களும், சாதாரண மக்களும் இந்த இரண்டு லட்சம் ரூபாவுக்கும் குறைவான (1.65 இலட்சம் இந்திய ரூபா) மின்சார நானோவை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். இந்தியாவின் மலிவு விலை மின்சார வாகன சந்தையில் இது ஒரு மைல்கல்லாக அமையுமா? காலமே பதில் சொல்லும்!

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1747606912.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன