இந்தியா
TN Cyclone Fengal | மயிலத்தில் 50 செ.மீ., புதுச்சேரியில் 47 செ.மீ…. ஃபெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை

TN Cyclone Fengal | மயிலத்தில் 50 செ.மீ., புதுச்சேரியில் 47 செ.மீ…. ஃபெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரையான காலகட்டத்தில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் 49.8 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, புதுச்சேரியில் 46.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூரில் 17.9 சென்டி மீட்டரும், திருவண்ணாமலையில் 17.6 சென்டிமீட்டரும், செய்யாறில் 16 சென்டிமீட்டரும், செங்கல்பட்டில் 13.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கோலப்பாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 11.5 சென்டிமீட்டர், திருத்தணியில் 11.4 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 10.4 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கலாம் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.