Connect with us

இலங்கை

ஜெட்டியா , ஜட்டியா கேலி பேசிய அர்ச்சுனா MP ; வசூல் மன்னன் ….பதிலடி கொடுத்த அமைச்சர் சந்திரசேகர் !

Published

on

Loading

ஜெட்டியா , ஜட்டியா கேலி பேசிய அர்ச்சுனா MP ; வசூல் மன்னன் ….பதிலடி கொடுத்த அமைச்சர் சந்திரசேகர் !

 பாராளுமன்றத்தில், இன்று (20) உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்து,  அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரனின் உரையை கேலி, கிண்டல் செய்த நிலையில்  அமைச்சர் சந்திரசேகர் , அருச்சுனா MPக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தான் வழமையாக உத்வேகத்துடன் உரையாற்றுவேன். எனினும், இன்று எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு முன்னதாக உரையாற்றியவர் வீதிகள், பாலங்களை  புணரமைப்பு  செய்ய போகிறாராம்.

Advertisement

ஐயா அது  புணரமைப்பு  அல்ல  புனரமைப்பு , ஆணும் பெண்ணும் தான் புணர முடியும் என்றார் அர்ச்சுனா இராமநாதன். அத்துடன், ஜெட்டியா (jetty), ஜட்டியா (jaṭṭi) என தெரியாது  எனஅர்ச்சுனா இராமநாதன்.கிண்டல் செய்தார்.

இந்நிலையில், அர்ச்சுனா இராமநாதனின் உரைக்கு பின்னர், ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்,

ஜட்டியா ​​ஜெட்டியா என்பது தெரியாது, ஜட்டியை கழற்றி தனது ​தலையில் ஜட்டியை போட்டுக் கொண்டு போகிறான்.

Advertisement

என கடுமையாக விமர்சித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பேசும் மொழியை கொச்சப்படுத்திய இவர், வசூல் மன்னன். கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார் என்றார்.

அதேவேளை  பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஏப்ரல் (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை, ஏப்ரல் 19ஆம் திகதி விதிக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் அன்று அறிவித்திருந்தார்.

Advertisement

பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து  எம்.பி  அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

 அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்  என்று சபாநாயகர் கூறியிருந்தார்.

அந்த தடைக்குப் பின்னர், அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்றத்தில், இன்று (20) உரையாற்றிய நிலையில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கிண்டலடித்து  பேசியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது . 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன