Connect with us

பொழுதுபோக்கு

மாமனாருக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா; ஈஸ்வரிக்கு பாக்யா வைத்த செக்: பரபரப்பாகும் பாக்கியலட்சுமி!

Published

on

Baakiyalskhmi April 01

Loading

மாமனாருக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா; ஈஸ்வரிக்கு பாக்யா வைத்த செக்: பரபரப்பாகும் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி சீரியலில், ரெஸ்டாரண்ட் பற்றி இனியா கேட்ட கேள்விக்கு சுதாகர் அதிர்ச்சியான நிலையில், பாக்யா குடும்பத்திற்குள் ஈஸ்வரி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,இன்றைய எபிசோடின் தொடக்கத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் ரவுடிகள் பஞ்சாயத்து செய்ய, பாக்கியா அமைதியாகவே எல்லாவற்றையும் செய்கிறார். கடைசியில் அவர்களிடம் பில்லை கொடுக்க அவர்கள், கணக்குல வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் செல்வி கோவப்பட அதற்கு போனா போகட்டும் என்று பாக்கியா சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் செழியன், குழந்தையால் இரவு முழுக்க சரியாக தூங்க முடியல ஆனா அதை புரிஞ்சுக்காம ஜெனி வேலை செய்யலன்னு கோபப்பட, எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான், அவ வீட்டில் இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வராது என்று ஈஸ்வரி சொல்கிறா. பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி உன்னால வீட்டில் சண்டை வரப்போகுது, செழியன் என் பொண்டாட்டி மட்டும்தான் வேலை செய்யுறானு கோவப்படுறான் என்று சொல்கிறான்.அதற்கு என்ன பண்ணனுமோ அத நான் பாத்துக்குறேன் என்று பாக்யா பதில் கொடுக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் பாக்யா வீட்டிற்கு வேலை பார்ப்பதற்காக ஒரு பெண்ணை அழைத்து வர, இந்த பெண்ணுக்கு சம்பளம் யார் கொடுப்பா என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு என்னுடைய பசங்க பாத்துக்குவாங்க என்று சொன்னதும் எழிலும் செழியனும் ஓகே சொல்கிறார்கள்.வீட்டு வேலையை இவங்க பாத்துக்கிட்டா என்னை யாரு பாத்துக்குறது உன்னுடைய பேர பசங்களை யார் பாத்துக்குவாங்க என்று ஈஸ்வரி கோபப்பட, நீங்க உங்களுடைய குழந்தைகளை பாத்துக்குவீங்களா என்று அமிர்தா மற்றும் ஜெனி இடம் பாக்யா கேட்க அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்வோம் என்று சொல்கிறார்கள். அதனால் பிரச்சனை முடிஞ்சது என்று சொல்லி பாக்கியா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.அடுத்து எழில் வீட்டிலிருந்து ஆபீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வந்து செழியன் உங்க அம்மா வேலைக்கு போறதுனால நீங்க தான் வீட்டு வேலை பாக்குறவஙகளுக்கு பணம் கொடுக்கணும், அதோடு வீட்டில் பொருட்கள் வாங்குவதறகும் அதிகமா பணம் ஆகும் என்று பயமுறுத்த செழியன் யோசிக்கிறான்.மறுபக்கத்தில் சுதாகர் வீட்டில் இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டை பற்றி விசாரிக்கிறார்.  அதற்கு அந்த ரெஸ்டாரண்டின் வேலை போயிட்டு இருக்குது அது முடிஞ்சதும் ஓபன் பண்ணனும் என்று சொல்ல, அந்த ரெஸ்டாரண்ட்டை நானே கவனிக்கிறேன் என்று இனியா சொன்னதும் சுதாகர் உட்பட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன