சினிமா
ஜீ தமிழில் இடைநிறுத்தப்பட்ட முக்கியமான சீரியல்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!

ஜீ தமிழில் இடைநிறுத்தப்பட்ட முக்கியமான சீரியல்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!
தமிழ் தொலைக்காட்சி உலகில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஜீ தமிழ் சேனலில், கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வீரா, மனசெல்லாம், மௌனம் பேசியதே, கெட்டி மேளம், மாரி, அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் எனப் பல தொடர்கள் தமிழ்ச் சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.இந்த வரிசையில் முக்கிய இடம் பெற்ற சீரியலாக ‘வள்ளியின் வேலன்’ மற்றும் ‘ராமன் தேடிய சீதை’ என்பன காணப்படுகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு தொடர்களும் நிறைவடையும் தகவல் தற்போது வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகின்றது.தற்போது ‘வள்ளியின் வேலன்’ சீரியல் தனது கிளைமேக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த சில வாரங்களில் இத்தொகுப்பு முடிவடையும் என்றும் சீரியல் வட்டாரங்கள் கூறுகின்றன.‘வள்ளியின் வேலன்’ சீரியல் முடிவடைவது மட்டுமல்லாமல், இன்னொரு முக்கிய முடிவையும் ஜீ தமிழ் எடுத்துள்ளது. அது என்னவென்றால், ஜீ கன்னடத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ‘ராமன் தேடிய சீதை’ என்ற தொடரின் தமிழ் டப்பிங் இன்று தான் இறுதியாக ஒளிபரப்பாகின்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடரை திடீரென நிறுத்தும் முடிவை ஜீ தமிழ் எடுத்திருப்பது, பல ரசிகர்களிடம் வெறுப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.