இலங்கை
ஈழத்தில் சாதனை பெண்ணாக மாறியுள்ள ஓவியர் கேசனா இராசரத்தினம்

ஈழத்தில் சாதனை பெண்ணாக மாறியுள்ள ஓவியர் கேசனா இராசரத்தினம்
ஈழத்தை பொறுத்தவரை தற்போது கலைத்துறையில்
எம்மவர்களின் வளர்ச்சி சடுதியாக வளர்ச்சி கண்டு வருகிறது. பல் துறைகளிலும்
எமது கலைஞர்கள் மிளிர்ந்து வருவது எம்மைப் பொறுத்தவரை பெருமையாகவே உள்ளது.
ஈழப்பரப்பையும்
தாண்டி இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பெயர் சொல்லுமளவிற்கு
எமது கலைஞர்கள் வளர்ச்சி கண்டுள்ளனர்.அந்த வகையில் ஈழத்தில் தனது சொந்த
முயற்சியால் சாதித்து வெற்றிகண்டுள்ள கேசனா இராசரத்தினம் அவர்களைப்
பற்றித்தான் ஆராயவுள்ளோம்.
வவுனியா கூமாங்குளத்தை தனது வதிவிடமாக
கொண்ட கேசனா இராசரத்தினம், வேலுப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் யூட்ஸ்
ஜக்குலின் ஆகியோருக்கு புதல்வியாக பிறந்தவருக்கு ஐந்து சகோதரர்களும் உண்டு.
தனது
ஆரம்ப கல்வி தொட்டு உயர்தரம்வரை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் மிகச்
சிறப்பாக கற்றவர், தற்போது ஈழத்தில் சிறந்த ஓவியராக தன்னை
மாற்றிக்கொண்டுள்ளார்.
சிறுவயதில் பாடசாலையில் வழங்கப்படும் சித்திர
வேலைகள் மற்றும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை கேசனாவின்
தந்தையாரே செய்து கொடுப்பது வழக்கமாகியதால், அவற்றை அருகிருந்து
அவதானித்ததன் விளைவாகவே ஓவியத்தின் மீதான ஆர்வம் கேசனாவிற்கு வந்ததென்றெ
கூறலாம்.
காலமும் கேசனாவை விட்டுவிடாமல் தன் கைபிடியில் அழைத்துச்
செல்ல சற்று வளர்ந்தவள், தனது ஓய்வு நேரங்களை வீணாக்கிவிடாது சாதித்துவிட
வேண்டுமென்ற எண்ணத்தில் ஓவியங்கள் வரைவதை தனது பழக்கமாக்கி கொண்டதால்,
பாடசாலையிலும் தனது கைவரிசையை காட்ட, ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும்
பாராட்ட துள்ளிக்குதித்து தனக்குள்ளே புளகாந்திதமடைந்த கேசனாவிற்கு,
இவ்வாறான பாராட்டுகள் மேலும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை
வலுவாக்கியது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை