வணிகம்
Today Gold Rate: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Today Gold Rate: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், பவுன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8 ஆயிரத்து 710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து பவுன் ரூ.69 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது.மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை ரூ.70 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கு விற்பனையாகிறதுதங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.